×

التوبة

வசனம் 40

அல்-முக்தஸர்

إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ ٱللَّهُ إِذْ أَخْرَجَهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ثَانِىَ ٱثْنَيْنِ إِذْ هُمَا فِى ٱلْغَارِ إِذْ يَقُولُ لِصَـٰحِبِهِۦ لَا تَحْزَنْ إِنَّ ٱللَّهَ مَعَنَا ۖ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيْهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلسُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ ٱللَّهِ هِىَ ٱلْعُلْيَا ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿٤٠﴾

நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யவில்லையெனில், அவருடைய அழைப்பை ஏற்று அவனுடைய பாதையில் போர் செய்வதற்கான அவரது அழைப்புக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையெனில், நீங்கள் இல்லாதிருந்த சமயத்திலும் அவன் அவருக்கு உதவிசெய்துள்ளான். அதுதான் இணைவைப்பாளர்கள் அவரையும் அபூபக்கர் (ரழி) அவர்களையும் வெளியேற்றிய சமயமாகும். அவர்கள் இருவரும் ஸவ்ர் என்னும் குகையில் வேறு யாருமின்றி தம்மைத் தேடிக்கொண்டிருந்த நிராகரிப்பாளர்களை விட்டும் மறைந்திருந்தனர். இணைவைப்பாளர்கள் தம்மைக் கண்டுபிடித்து விடுவார்களோ என அபூபக்ர் (ரழி) பயந்த போது தூதர் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் நம்முடனிருந்து பலப்படுத்திக் கொண்டும் உதவி செய்து கொண்டும் இருக்கின்றான்.” அல்லாஹ் தன் தூதரின் உள்ளத்தில் நிம்மதியை இறக்கினான். அவருக்கு உதவி செய்வதற்காக உங்களால் பார்க்க முடியாத அவரைப் பலப்படுத்தும் வானவர் படையை அனுப்பினான். இஸ்லாத்தை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வாக்கை தாழ்த்தினான். அல்லாஹ்வின் வாக்கை உயர்ந்ததாக மாற்றினான். அல்லாஹ் தன் உள்ளமையிலும் அடக்குவதிலும் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது திட்டமிடலில் தான் அமைத்த விதிகளில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.