அல்-முக்தஸர்
إِلَّا تَنفِرُوا۟ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْـًٔا ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿٣٩﴾
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளுடன் போர்புரிவதற்குப் புறப்படவில்லையெனில் உங்களை அடக்குதல், இழிவுபடுத்தல் போன்றவற்றின் மூலம் அவன் உங்களைத் தண்டிப்பான். உங்களை விடுத்து வேறோரு சமூகத்தைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படக்கூடியவர்களாக, போருக்காக அழைப்புவிடுக்கப்பட்டால் புறப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதால் அவனுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. அவன் உங்களை விட்டும் தேவையற்றவன். நீங்கள்தாம் அவன்பால் தேவையுடையவர்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் உடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிட முடியாது. நீங்கள் இல்லாவிட்டாலும் தன் மார்க்கத்திற்கும் தூதருக்கும் உதவி செய்வதற்கு அவன் ஆற்றலுடையவன்.