அல்-முக்தஸர்
ٱنفِرُوا۟ خِفَافًا وَثِقَالًا وَجَـٰهِدُوا۟ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٤١﴾
நம்பிக்கையாளர்களே!- சிரமத்திலும் இலகுவிலும், இளைஞர்களாகவும், முதியவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காகப் புறப்படுங்கள். உங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்யுங்கள். ஏனெனில் அவ்வாறு புறப்பட்டு, செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்வது, ஜிஹாது செய்யாமல் இருந்து கொண்டு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதில் ஈடுபட்டிருப்பதை விட இவ்வுலகிவும் மறுவுலகிலும் அதிகப் பயனைத் தரக்கூடியதாகும். நீங்கள் அதனை அறிந்தவர்களாக இருந்தால் இதற்காக ஆர்வம் கொள்ளுங்கள்.