×

الأنفال

வசனம் 52

அல்-முக்தஸர்

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ شَدِيدُ ٱلْعِقَابِ ﴿٥٢﴾

இந்நிராகரிப்பாளர்களுக்கு இறங்கிய இவ்வேதனை அவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. மாறாக எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் இருந்த நிராகரிப்பாளர்களின் மீதும் நடைமுறைப்படுத்திய வழிமுறையே இதுவாகும். பிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தபோது அவர்களையும் அது பீடித்தது. அவர்களின் பாவங்களின் காரணமாக அவன் அவர்களை கண்ணியமான ஆற்றல் உடைய ஒருவனின் பிடியாகப் பிடித்தான். அவர்கள் மீது தன் தண்டனையை இறக்கினான். நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன். யாராலும் அவனை அடக்கவோ மிகைக்கவோ முடியாது. தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.