அல்-முக்தஸர்
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّـٰمٍ لِّلْعَبِيدِ ﴿٥١﴾
நிராகரிப்பாளர்களே!- உங்களது உயிர்களைக் கைப்பற்றும் போது அளிக்கப்படும் வேதனைமிக்க இந்த தண்டனையும் மண்ணறையிலும் மறுமையிலும் அளிக்கப்படும் பொசுக்கக்கூடிய இந்த வேதனையும் இவ்வுலகில் உங்களின் கைகள் சம்பாதித்த தீவினைகளின் காரணமாக ஏற்படக்கூடியதாகும். அல்லாஹ் மனிதர்கள் மீது அநீதி இழைப்பதில்லை. அவன் அவர்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கிறான். அவனே நீதிமிக்க தீர்ப்பாளன்.