அல்-முக்தஸர்
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۙ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ﴿٥٣﴾
கடுமையான இந்த வேதனைக்குக் காரணம் இதுதான்: இறைநம்பிக்கை, நேர்வழியில் நடத்தல், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தல் என்ற நல்ல நிலையிலிருந்து, நிராகரிப்பு, பாவங்கள் மற்றும் நன்றி மறத்தல் என்ற தீய நிலைக்கு தம்மைத் தாமே மாற்றும் வரை அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு அளித்த அருட்கொடைகளை அவர்களிடமிருந்து பிடுங்க மாட்டான். தன் அடியார்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.