அல்-முக்தஸர்
وَإِذْ يَمْكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَـٰكِرِينَ ﴿٣٠﴾
தூதரே!- உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது கைதுசெய்ய வேண்டும் அல்லது நாடுகடத்த வேண்டும் என்பதற்காக இணைவைப்பாளர்கள் இரகசியமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் உமக்கு சூழ்ச்சி செய்கின்றனர். அவர்களது சூழ்ச்சியை அல்லாஹ் அவர்கள் மீதே திருப்பி விட்டு அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ்வே மிகச் சிறந்த சூழ்ச்சியாளனாவான்.