அல்-முக்தஸர்
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُنَا قَالُوا۟ قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هَـٰذَآ ۙ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ ﴿٣١﴾
நம்முடைய வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக, “நாங்கள் முன்னரே இதைப் போன்று செவியேற்றுவிட்டோம். நாங்கள் நினைத்தால் இது போன்று நாமும் கூறுவோம். நாங்கள் செவியேற்கும் இந்தக் குர்ஆன் முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை. ஒருபோதும் இதை நம்பமாட்டோம்” என்று கூறுகிறார்கள்.