×

الأنفال

வசனம் 29

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَتَّقُوا۟ ٱللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ ﴿٢٩﴾

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்சினால் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதை அவன் உங்களுக்கு வழங்குவான். எனவே எது சத்தியம் எது அசத்தியம் என உங்களுக்கு குழப்பம் ஏற்படாது. நீங்கள் செய்த தீய செயல்களை அவன் போக்கிவிடுவான். உங்களின் பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மகத்தான அருளாளனாவான். அவன் தன்னை அஞ்சக்கூடிய அடியார்களுக்காக தயார் படுத்திவைத்துள்ள சுவனங்களும் அவனுடைய அருளில் உள்ளவைதான்.