அல்-முக்தஸர்
وَقَالُوا۟ هَـٰذِهِۦٓ أَنْعَـٰمٌ وَحَرْثٌ حِجْرٌ لَّا يَطْعَمُهَآ إِلَّا مَن نَّشَآءُ بِزَعْمِهِمْ وَأَنْعَـٰمٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَـٰمٌ لَّا يَذْكُرُونَ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهَا ٱفْتِرَآءً عَلَيْهِ ۚ سَيَجْزِيهِم بِمَا كَانُوا۟ يَفْتَرُونَ ﴿١٣٨﴾
“இந்த கால்நடைகளும் பல வகையான பயிர்களும் தடுக்கப்பட்டவையாகும். சிலைகளின் சேவகர்கள் போன்ற தாம் விரும்பியவர்களைத் தவிர வேறு யாரும் இவற்றை உண்ணக்கூடாது; இந்த கால்நடைகளின் முதுகுகள் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றின் மீது பயணம் செய்யவோ சுமைகளை ஏற்றவோ கூடாது; (அல்பஹீரா: காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்,அஸ்ஸாஇபா: சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு மேய விடப்பட்ட பெண் ஒட்டகம், அல்ஹாமி: அதிகமான பெண் ஒட்டகங்களை கருவுறச் செய்த ஆண் ஒட்டகம்) இந்த கால்நடைகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறக் கூடாது. சிலைகளின் பெயர்களைத்தான் கூற வேண்டும்” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள். இவைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த சட்டம் என அல்லாஹ்வின் மீது பொய் கூறியே இவற்றைச் செய்தனர். அல்லாஹ்வின் மீது அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக விரைவில் அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.