×

الأنعام

வசனம் 137

அல்-முக்தஸர்

وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ ٱلْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَـٰدِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا۟ عَلَيْهِمْ دِينَهُمْ ۖ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ ﴿١٣٧﴾

அநியாயமான இந்த பங்கீட்டை ஷைத்தான் இணைவைப்பாளர்களுக்கு அலங்கரித்துக் காட்டியது போன்று வறுமைக்குப் பயந்து தங்களின் குழந்தைகளைக் கொலை செய்வதையும் அவர்கள் இணையாகக் கருதிய ஷைத்தான் அவர்களில் அதிகமானோருக்கு அலங்கரித்துக் காட்டினான். அல்லாஹ் தடைசெய்த ஓர் உயிரை அநியாயமாகக் கொலை செய்ய வைத்து அவர்களை அழிவுக்குள்ளாக்கவும் எது அனுமதிக்கப்பட்டது? எது தடைசெய்யப்பட்டது? என்பதை அறியாதவாறு அவர்களின் மார்க்கத்தைக் குழப்பத்திற்குள்ளாக்கவுமே இவ்வாறு ஷைதான்கள் செய்தனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் ஒரு பெரும் நோக்கத்திற்காக இவ்வாறு நாடிவிட்டான். தூதரே! இந்த இணைவைப்பாளர்களையும் அல்லாஹ்வின் மீது அவர்கள் இட்டுக் கட்டியதையும் விட்டுவிடுவீராக. இதனால் உமக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அவர்களின் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவீராக.