×

الأنعام

வசனம் 139

அல்-முக்தஸர்

وَقَالُوا۟ مَا فِى بُطُونِ هَـٰذِهِ ٱلْأَنْعَـٰمِ خَالِصَةٌ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزْوَٰجِنَا ۖ وَإِن يَكُن مَّيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَآءُ ۚ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌ ﴿١٣٩﴾

“இந்த சாயீபா, பஹீரா போன்ற கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் உயிரோடு பிறந்தால் அவை எங்கள் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். பெண்களுக்குத் தடை செய்யப்பட்டதாகும். அவற்றின் வயிற்றிலுள்ள குட்டிகள் செத்துப் பிறந்தால் அவை எங்களின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறியதனால் தகுந்த தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பான். தான் வழங்கும் சட்டங்களிலும், தன் படைப்புகளைப் பராமரிப்பதிலும் அவன் ஞானம் மிக்கவன்; அவர்களைக் குறித்து நன்கறிந்தவன்.