×

المائدة

வசனம் 94

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَيَبْلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَىْءٍ مِّنَ ٱلصَّيْدِ تَنَالُهُۥٓ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلْغَيْبِ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ ﴿٩٤﴾

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது ஏதாவது தரை வேட்டைப் பிராணியை அனுப்பி வைத்து அவன் உங்களைச் சோதிப்பான். அவற்றில் சிறியதை உங்களின் கைகளால் பிடித்துவிடலாம், பெரியதை உங்களின் ஈட்டியால் வேட்டையாடிவிடலாம். அல்லாஹ்வின் அறிவைப் பரிபூரணமாக நம்பிக்கைகொண்டதனால், மறைவில் தன்னை அஞ்சுவோர் யார் என்பதை அடையாளப்படுத்தி விசாரணை செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறான விஷயங்களை ஏற்படுத்துகிறான். தனது செயல்கள் மறைய முடியாத தன்னைப் படைத்தவனுக்கு அஞ்சியதனால் வேட்டையாடாமல் தவிர்ந்து கொள்கிறான். யார் வரம்புமீறி இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடி விடுவாரோ - அல்லாஹ் தடுத்த செயல்களைச் செய்ததனால் - அவருக்கு மறுமைநாளில் வேதனைமிக்க தண்டனை உண்டு.