×

المائدة

வசனம் 95

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْتُلُوا۟ ٱلصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ ۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحْكُمُ بِهِۦ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًۢا بَـٰلِغَ ٱلْكَعْبَةِ أَوْ كَفَّـٰرَةٌ طَعَامُ مَسَـٰكِينَ أَوْ عَدْلُ ذَٰلِكَ صِيَامًا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِۦ ۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَ ۚ وَمَنْ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنْهُ ۗ وَٱللَّهُ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ ﴿٩٥﴾

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் போது தரை மிருகங்களை வேட்டையாடாதீர்கள். யார் வேண்டுமென்றே வேட்டையாடிக் கொன்றுவிடுவாரோ அவர் அதுபோன்ற ஒட்டகத்தையோ ஆட்டையோ மாட்டையோ பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். முஸ்லிம்களிடையே நீதிமிக்க இரு மனிதர்கள் இதை முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் இருவரின் தீர்ப்பில் முடிவாவதை மக்காவிற்கு அனுப்பப்பட்டு ஹரமில் பலியிடப்படும் அல்லது ஹரமிலுள்ள சில ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக அதற்கான தொகையைக் கொடுத்துவிட வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவு அளிக்கப்பட வேண்டும்) அல்லது அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். இவையனைத்தும் வேட்டையாடியவர் தாம் செய்த செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தடைஉத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால், புனித எல்லையில் வேட்டையாடியது இஹ்ராம் அணிந்த நிலையில் தரைவாழ் மிருகங்களை வேட்டையாடியது ஆகியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அவ்வாறு செய்பவரை அல்லாஹ் தண்டித்துப் பழிவாங்குவான். அவன் வல்லமைமிக்கவன். தான் நாடினால் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்களை தண்டிப்பதும் அவனது வல்லமையில் உள்ளவைதான். அதிலிருந்து அவனை யாராலும் தடுக்கமுடியாது.