அல்-முக்தஸர்
لَيْسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوٓا۟ إِذَا مَا ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ ثُمَّ ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ ثُمَّ ٱتَّقَوا۟ وَّأَحْسَنُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ ﴿٩٣﴾
அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, அவனை நெருங்குவதற்காக நற்செயல்கள் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை அஞ்சியோராகவும் அவன் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களாகவும் இருந்துகொண்டு தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ந்துகொண்டால் மது அருந்துவது தடைசெய்யப்படுவதற்கு முன் அருந்தியதற்கு அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அதன் பின் ‘அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான்’ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கி அவனைப் பார்ப்பது போன்றே அவனை வணங்க ஆரம்பித்தார்கள். தன்னைப் பார்ப்பது போன்றே தன்னை வணங்கக்கூடியவர்கள், எப்பொழுதுமே அல்லாஹ் தம்மைக் கண்காணிக்கின்றான் என்ற உணர்வுடன் இருப்பதனால் அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். இதுதான் ஒரு நம்பிக்கையாளனை தனது செயற்பாடுகளை அழகிய முறையிலும் திறமையாகவும் செய்வதற்குத் தூண்டுகிறது.