அல்-முக்தஸர்
لَقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ ۖ وَقَالَ ٱلْمَسِيحُ يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۖ إِنَّهُۥ مَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ حَرَّمَ ٱللَّهُ عَلَيْهِ ٱلْجَنَّةَ وَمَأْوَىٰهُ ٱلنَّارُ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ ﴿٧٢﴾
மர்யமின் மகன் ஈஸாதான் அல்லாஹ் என்று கூறி தெய்வீகத் தன்மையை அல்லாஹ் அல்லாதவருக்கு வழங்கியதனால் கிறிஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். மாறாக ஈஸாவே இஸ்ராயீலின் மக்களிடம் பின்வருமாறுதான் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனே என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். அடிமைத்துவத்தில் நாம் அனைவரும் சமமானவர்கள்தாம். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர் நிரந்தரமாக சுவனத்தை விட்டுத் தடுக்கப்படுவார். அவரது தங்குமிடம் நரகமாகும். அல்லாஹ்விடத்தில் அவருக்கு உதவிபெற்றுக்கொடுப்பவர் யாரும் இல்லை. காத்திருக்கும் வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார்கள்.