×

المائدة

வசனம் 71

அல்-முக்தஸர்

وَحَسِبُوٓا۟ أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا۟ وَصَمُّوا۟ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا۟ وَصَمُّوا۟ كَثِيرٌ مِّنْهُمْ ۚ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ ﴿٧١﴾

வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியது, தூதர்களை நிராகரித்தது, அவர்களைக் கொலைசெய்தது ஆகிய செயல்களால் தங்களுக்கு எந்த தீங்கும் நேராது என்று அவர்கள் எண்ணினார்கள். மாறாக அவர்கள் எண்ணிப்பார்க்காத விளைவு அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் சத்தியத்தை விட்டும் குருடாகிவிட்டனர். எனவே அவர்களால் நேர்வழியை அடையமுடியவில்லை. சத்தியத்தைக் கேட்பதை விட்டும் அவர்கள் செவிடாகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் மீது அருள்செய்தான். அதன் பின்னரும் அவர்கள் சத்தியத்தை விட்டும் குருடாகிவிட்டார்கள். அதனைச் செவியேற்பதை விட்டும் செவிடாகிவிட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவர்களைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.