அல்-முக்தஸர்
لَّقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ ثَالِثُ ثَلَـٰثَةٍ ۘ وَمَا مِنْ إِلَـٰهٍ إِلَّآ إِلَـٰهٌ وَٰحِدٌ ۚ وَإِن لَّمْ يَنتَهُوا۟ عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٧٣﴾
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் - பிதா, மகன், பரிசுத்த ஆவி - ஒன்றிணைந்தவன் என்று கூறிய கிறிஸ்தவர்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்களின் இந்தக் கூற்றை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். அல்லாஹ் பலர் அல்ல. அவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவர்களின் இந்த மோசமான கூற்றிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளவில்லையெனில் வேதனைமிக்க தண்டனை அவர்களை அடைந்தே தீரும்.