அல்-முக்தஸர்
وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا۟ مِنْ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٌ مِّنْهُمْ غَيْرَ ٱلَّذِى تَقُولُ ۖ وَٱللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ ۖ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ﴿٨١﴾
இந்த நயவஞ்சகர்கள் தங்களின் நாவால், “நாங்கள் உமது கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம், அதனைச் செயல்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் உம்மைவிட்டுச் சென்றவுடன் அவர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் கூறியதற்கு மாறாக மறைவில் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சி செய்வதை அல்லாஹ் அறிகிறான். அவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு அவன் தண்டனை வழங்குவான். அவர்களின் பக்கம் கவனம் செலுத்தாதீர். அவர்கள் உமக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது. உமது காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பீராக. அவனையே நம்பி இருப்பீராக. நீர் நம்பிக்கை வைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.