×

النساء

வசனம் 82

அல்-முக்தஸர்

أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلْقُرْءَانَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ ٱللَّهِ لَوَجَدُوا۟ فِيهِ ٱخْتِلَـٰفًا كَثِيرًا ﴿٨٢﴾

இவர்கள் ஏன் அல்குர்ஆனை சிந்திக்காமலும் படிக்காமலும் இருக்கின்றனர்? அவ்வாறு சிந்தித்திருந்தால் அல்குர்ஆனில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பது அவர்களுக்கு நிரூபனமாவதோடு, நீர் கொண்டுவந்தவை உண்மையே என்பதையும் புரிந்திருப்பர். இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதன் சட்டங்களில் தடுமாற்றத்தையும் கருத்துக்களில் ஏராளமான முரண்பாடுகளையும் அவர்கள் கண்டிருப்பார்கள்.