×

النساء

வசனம் 80

அல்-முக்தஸர்

مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدْ أَطَاعَ ٱللَّهَ ۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرْسَلْنَـٰكَ عَلَيْهِمْ حَفِيظًا ﴿٨٠﴾

யார் தூதர் கூறியவற்றைச் செயல்படுத்தி, அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவராவார். தூதரே! யார் உமக்குக் கட்டுப்பட மறுக்கிறாரோ அவருக்காக நீர் கவலைப்படவேண்டாம். ஏனெனில் அவரது செயல்களைப் பாதுகாக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. மாறாக நாம்தாம் அவரது செயலை எண்ணுகிறோம், கணக்கிடுகிறாம்.