அல்-முக்தஸர்
مَّآ أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ ٱللَّهِ ۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ ۚ وَأَرْسَلْنَـٰكَ لِلنَّاسِ رَسُولًا ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا ﴿٧٩﴾
ஆதமுடைய மகனே! உனக்கு கிடைக்கக்கூடிய செல்வங்கள், குழந்தைகள் போன்ற இன்பங்கள் அல்லாஹ்விடமிருந்தே உனக்குக் கிடைப்பவையாகும். அது அல்லாஹ் உன்மீது பொழியும் அருளாகும். அவற்றில் உனக்கு வரக்கூடிய துன்பங்கள் நீ செய்த பாவங்களினால் ஏற்பட்ட விளைவேயாகும். தூதரே! மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து தூதுச் செய்தியை எடுத்துரைக்கும் தூதராக நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அல்லாஹ்விடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நீர் உண்மையாளரே என்பதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன். அவன் உமக்கு அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் வழங்கியுள்ளான்.