×

النساء

வசனம் 172

அல்-முக்தஸர்

لَّن يَسْتَنكِفَ ٱلْمَسِيحُ أَن يَكُونَ عَبْدًا لِّلَّهِ وَلَا ٱلْمَلَـٰٓئِكَةُ ٱلْمُقَرَّبُونَ ۚ وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادَتِهِۦ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا ﴿١٧٢﴾

மர்யமின் மகன் ஈசா அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார். அல்லாஹ் தனக்கு நெருக்கமாக்கி உயர்ந்த பதவிகளை வழங்கிய வானவர்களும் அவனுக்கு அடிமைகளாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார்கள். mஅவ்வாறிருக்க ஈசாவை நீங்கள் எவ்வாறு இறைவனாக்கிக் கொண்டீர்கள்? இணைவைப்பாளர்கள் எவ்வாறு வானவர்களை கடவுள்களாக்கிக் கொண்டார்கள்? அல்லாஹ்வை வணங்குவதைவிட்டும் எவர் தவிர்ந்துகொள்கிறாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்குவான்.