அல்-முக்தஸர்
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ وَلَا تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ إِنَّمَا ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلْقَىٰهَآ إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِّنْهُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۖ وَلَا تَقُولُوا۟ ثَلَـٰثَةٌ ۚ ٱنتَهُوا۟ خَيْرًا لَّكُمْ ۚ إِنَّمَا ٱللَّهُ إِلَـٰهٌ وَٰحِدٌ ۖ سُبْحَـٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٌ ۘ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ﴿١٧١﴾
தூதரே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களிடம் கூறுவீராக: “உங்களின் மார்க்கத்தில் வரம்புமீறி விடாதீர்கள். ஈசாவைக் குறித்து உண்மையைத் தவிர எதனையும் அல்லாஹ்வின் மீது கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈசா மஸீஹ் உண்மையைக் கொண்டு அல்லாஹ் அனுப்பிய தூதரே. ஜிப்ரீல் மூலம் மர்யமிடம் அனுப்பிய தன் வார்த்தையால் அவரைப் படைத்தான். குன் - ஆகிவிடு என்பதுதான் அந்த வார்த்தை. அவர் ஆகிவிட்டார். அல்லாஹ்வின் கட்டளையினால் ஜீப்ரீல் மர்யமிடம் அதை ஊதினார். எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்கள் அனைவரின்மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ளுங்கள். ‘கடவுள்கள் மூவர்’ என்று கூறாதீர்கள். பொய்யான இந்த விஷயத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை பயக்கும். இறைவன் ஒருவனே. அவனுக்கு மனைவியோ மகனோ யாரும் இல்லை. அவன் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கு இடையிலுள்ளவையும் அவனுக்கே உரியன. வானங்கள் பூமி ஆகியவற்றில் உள்ளவற்றைக் கவனிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அல்லாஹ்வே போதுமானவனாவான்.