அல்-முக்தஸர்
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ ۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسْتَنكَفُوا۟ وَٱسْتَكْبَرُوا۟ فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا ﴿١٧٣﴾
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதர்களை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வுக்காக தூய்மையான எண்ணத்துடன் அவன் காட்டிய முறையில் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கான கூலியை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவான். அவர்களுக்கு தன் அருளிலிருந்தும் உபகாரத்திலிருந்தும் இன்னும் அதிகமாகவும் வழங்குவான். பெருமை மற்றும் கர்வம் காரணமாக அல்லாஹ்வை வணங்குவதையும் அவனுக்குக் கட்டுப்படுவதையும் விட்டு தவிர்ந்து கொண்டவர்களுக்கு அவன் வேதனைமிக்க தண்டனையை அளித்திடுவான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குப் பயனளிக்கும் பாதுகாவலனையோ அவர்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளனையோ அவர்கள் பெறமாட்டார்கள்.