×

النساء

வசனம் 128

அல்-முக்தஸர்

وَإِنِ ٱمْرَأَةٌ خَافَتْ مِنۢ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۚ وَٱلصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ ٱلْأَنفُسُ ٱلشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴿١٢٨﴾

ஒரு பெண் தன் கணவன் தன்மீது விருப்பமின்றி தன்னைப் புறக்கணித்துவிடுவான் என்று அஞ்சினால் - செலவுசெய்தல், இரவுதங்குதல் போன்ற - கடமையாக்கப்பட்ட தனது சில உரிமைகளை மனைவி விட்டுக்கொடுத்து இருவரும் சமாதானம் செய்துகொள்வதில் இருவர்மீதும் எந்தக்குற்றமும் இல்லை. விவாகரத்து செய்வதைவிட சமாதானம் செய்வதே சிறந்ததாகும். உள்ளங்கள் பேராசை, கஞ்சத்தனம் கொண்டதாகவே படைக்கப்பட்டுள்ளன. எனவேதான் அந்த உள்ளம் தன் உரிமைகளை விட்டுக்கொடுக்க விரும்பாது. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், நன்மை செய்தல் ஆகிய பண்புகளுக்கு தங்களின் மனதைப் பண்படுத்தி இத்தீயகுணத்தை மாற்றிகொள்ள வேண்டும். உங்களின் எல்லா விவகாரங்களிலும் நீங்கள் நல்லமுறையில் நடந்துகொண்டால், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.