அல்-முக்தஸர்
وَلَن تَسْتَطِيعُوٓا۟ أَن تَعْدِلُوا۟ بَيْنَ ٱلنِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ ۖ فَلَا تَمِيلُوا۟ كُلَّ ٱلْمَيْلِ فَتَذَرُوهَا كَٱلْمُعَلَّقَةِ ۚ وَإِن تُصْلِحُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا ﴿١٢٩﴾
கணவர்களே! நீங்கள் என்னதான் விரும்பினாலும் உள்ளத்தில் ஏற்படும் அன்பில் உங்கள் மனைவியரிடையே உங்களால் முழுமையாக நீதிசெலுத்த முடியாது. சில சமயங்களில் அது உங்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் நீங்கள் நேசிக்காத பெண்ணை முழுமையாகப் புறக்கணித்து- கணவனின் உரிமையைப் பெறாதவளாகவும் வேறு திருமணமும் செய்ய முடியாதவளாகவும் - விட்டுவிடாதீர்கள். உங்கள் மனம் விரும்பாத மனைவியரின் உரிமையை அளிப்பதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்தி உங்களிடையே சமாதானம் செய்துகொண்டு, அந்த மனைவியின் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.