×

النساء

வசனம் 127

அல்-முக்தஸர்

وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَـٰبِ فِى يَتَـٰمَى ٱلنِّسَآءِ ٱلَّـٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَـٰمَىٰ بِٱلْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًا ﴿١٢٧﴾

தூதரே! அவர்கள் பெண்களைக் குறித்தும் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறித்தும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “நீங்கள் கேட்டதை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். உங்களின் பொறுப்புகளிலுள்ள அநாதைப் பெண்களைக்குறித்தும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மணக்கொடையையோ அனந்தரச்சொத்தையோ அளிக்காமல் அவர்களை மணமுடிப்பதை நீங்கள் விரும்பாதததோடு அவர்களின் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு அவர்களை மணமுடிப்பதையும் தடுத்துவைத்துக் கொள்வதைக் குறித்து அல்லாஹ்வின் வேதத்தில் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுபவற்றையும் தெளிவுபடுத்துகிறான். பலவீனமான சிறுவர்களுக்கு அளிக்க வேண்டிய வாரிசுரிமைக் குறித்தும் நீங்கள் அவர்களின் செல்வங்களைப் பிடுங்கி அவர்களின்மீது அநீதி இழைத்துவிடக்கூடாது என்பது குறித்தும் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அநாதைகளின் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுடன் நீதமாக நடந்துகொள்வதன் அவசியத்தையும் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். நீங்கள் அநாதைகளுக்கோ மற்றவர்களுக்கோ செய்யும் நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.