×

آل عمران

வசனம் 40

அல்-முக்தஸர்

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَـٰمٌ وَقَدْ بَلَغَنِىَ ٱلْكِبَرُ وَٱمْرَأَتِى عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفْعَلُ مَا يَشَآءُ ﴿٤٠﴾

வானவர்களின் நற்செய்தியைக் கேட்ட ஸகரிய்யா, “என் இறைவா! எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? நானோ தள்ளாத வயதை அடைந்துவிட்டேன். என் மனைவியே பிள்ளைபெறாத மலடியாக இருக்கிறாளே!? என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு அல்லாஹ் கூறினான்: உங்களது தள்ளாத வயதிலும், மலடியான மனைவிலும் யஹ்யாவை பிறக்கச்செய்வதற்கு உதாரணம் வழக்கத்திற்கு மாறாக தான் நாடியவற்றைப் படைப்பதாகும். ஏனெனில் அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். தனது ஞானத்திற்கும் அறிவுக்கும் ஏற்றவாறு நாடியதைச் செய்கிறான்.