×

آل عمران

வசனம் 39

அல்-முக்தஸர்

فَنَادَتْهُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٌ يُصَلِّى فِى ٱلْمِحْرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ ٱللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ ٱلصَّـٰلِحِينَ ﴿٣٩﴾

அவர் தமது தொழுகைமாடத்திலே நின்று வணங்கிக் கொண்டிருந்தபோது வானவர்கள் அவரை அழைத்து, “அல்லாஹ் உமக்கு ஒரு ஆண்குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவரது பெயர் ‘யஹ்யா’வாகும். அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார். (அல்லாஹ்வின் வார்த்தையால் பிரத்யேகமான முறையில் படைக்கப்பட்ட ஈஸா அலை அவர்களையே இது குறிக்கின்றது) யஹ்யா கல்வியிலும் வணக்க வழிபாட்டிலும் தம் சமூக மக்களுக்குத் தலைவராக இருப்பார்; பெண்களை விட்டும் விலகியவராக, தம் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவராக, இறைவழிபாட்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவராக இருப்பார். நல்லோர்களில் உள்ள தூதராகவும் இருப்பார்.