×

آل عمران

வசனம் 41

அல்-முக்தஸர்

قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةً ۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَـٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا ۗ وَٱذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَـٰرِ ﴿٤١﴾

“என் இறைவா! என் மனைவி என் மூலம் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதற்கு என்னிடம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்து” என்று ஸகரிய்யா வேண்டினார். “அதற்கான அடையாளம், உமக்கு எந்த தீங்கும் நேராமலேயே உம்மால் மூன்று இரவும், பகலும் மக்களுடன் சைகை மூலமாகவே அன்றி பேசமுடியாது. பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர்ந்து அவனது தூய்மையைப் பறைசாற்றுவீராக” என்று அல்லாஹ் கூறினான்.