×

آل عمران

வசனம் 14

அல்-முக்தஸர்

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلْبَنِينَ وَٱلْقَنَـٰطِيرِ ٱلْمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلْفِضَّةِ وَٱلْخَيْلِ ٱلْمُسَوَّمَةِ وَٱلْأَنْعَـٰمِ وَٱلْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَـٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلْمَـَٔابِ ﴿١٤﴾

மக்களை சோதிக்கும்பொருட்டு இவ்வுலக இன்பங்களை விரும்புவதை அவர்களுக்கு அழகாகக் காட்டியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். உதாரணமாக, பெண்கள், ஆண்பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய அடையாளமிடப்பட்ட குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள், விளைநிலங்கள். ஆயினும் இவையனைத்தும் சில காலம் அனுபவித்த பின் அழியக்கூடிய இவ்வுலக இன்பங்கள்தாம். இவற்றின்மீது மோகம்கொள்வது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல. அல்லாஹ்விடமே சுவனம் என்னும் அழகிய திரும்புமிடம் இருக்கின்றது. அது வானங்கள் பூமியளவு விசாலமானது.