×

آل عمران

வசனம் 15

அல்-முக்தஸர்

قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَٰلِكُمْ ۚ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا وَأَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَٰنٌ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ ﴿١٥﴾

தூதரே! நீர் கூறுவீராக, “இந்த இன்பங்களைவிட சிறந்தவற்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு சொர்க்கச் சோலைகள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். மரணமோ அழிவோ இன்றி அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு குணத்திலும் தோற்றத்திலும் அனைத்துக் குறைகளையும் விட்டும் பரிசுத்தமான துணைவியரும் உண்டு. இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் திருப்தியடைவான். அவன் ஒருபோதும் அவர்கள்மீது கோபம்கொள்ள மாட்டான். அல்லாஹ் தன் அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு கூலி வழங்குவான்.