×

آل عمران

வசனம் 13

அல்-முக்தஸர்

قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا ۖ فِئَةٌ تُقَـٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ ۚ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَـٰرِ ﴿١٣﴾

பத்ருப்போரில் மோதிக்கொண்ட இரு பிரிவினரிடமும் உங்களுக்கு படிப்பினைகளும் சான்றுகளும் இருக்கின்றன. ஒரு பிரிவினர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அவனுடைய தூதரும் அவருடைய தோழர்களுமாவார். அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் நிராகரித்தோரின் வாக்கை தாழ்த்துவதற்காகவும் அவனுடைய பாதையில் போரிட்டார்கள். மற்றொரு பிரிவினர் அவனை நிராகரித்த மக்காவாசிகளாவர். கர்வத்திற்காகவும் வெளிப்பகட்டிற்காகவும் குலப்பெருமைக்காகவும் அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அவர்களை நம்பிக்கையாளர்கள் தம்மைவிட இருமடங்காகக் கண்டார்கள். அல்லாஹ் தன் நேசர்களுக்கு உதவிசெய்தான். அவன் தான் நாடியோரை தன் உதவியால் வலுப்படுத்துகிறான். அகப்பார்வையுடையவர்களுக்கு இதில் படிப்பினைகளும் அறிவுரைகளும் இருக்கின்றன. நம்பிக்கையாளர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள்தாம் அல்லாஹ்வின் உதவியைப் பெறுவார்கள். அசத்தியவாதிகள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் தோல்வியையே பெறுவார்கள். என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.