×

الحج

வசனம் 62

அல்-முக்தஸர்

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلْبَـٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ ﴿٦٢﴾

அல்லாஹ் இரவைப் பகலில் நுழையச் செய்வதும் பகலை இரவில் நுழையச் செய்வதும் ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், அவனுடைய மார்க்கமும், அவன் அளித்த வாக்குறுதியும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்வதும் உண்மையானது, அல்லாஹ்வை தவிர இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் அடிப்படையற்ற அசத்தியமாகும் என்பதினாலேயாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளை விட உள்ளமையாலும் மதிப்பாலும் ஆதிக்கத்தாலும் மிக உயர்ந்தவன்; மிகப் பெரியவன். பெருமையும் கண்ணியமும் மகத்துவமும் அவனுக்கே உரியது.