×

الحج

வசனம் 63

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَتُصْبِحُ ٱلْأَرْضُ مُخْضَرَّةً ۗ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٌ ﴿٦٣﴾

தூதரே!- நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்குகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மழை பெய்த பிறகு பூமி அதில் முளைக்கும் தாவரங்களால் பசுமையாகிவிடுகிறது. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுடன் மென்மையாளனாக உள்ளான். அதனால் தான் அவர்களுக்கு மழையைப் பொழிந்து பூமியைப் பசுமையாக்கினான். அவர்களின் நலன்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.