×

الحج

வசனம் 61

அல்-முக்தஸர்

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ ﴿٦١﴾

அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு அல்லாஹ் இவ்வாறு உதவிசெய்வது ஏனெனில் நிச்சயமாக அவன் தான் நாடியதைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் என்பதனாலாகும். அவனுடைய ஆற்றலில் உள்ளதே, இரவையும் பகலையும் ஒன்றைக் கூட்டியும் ஒன்றைக் குறைத்தும் ஒன்றில் ஒன்றை நுழையச் செய்வதாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.