×

البقرة

வசனம் 66

அல்-முக்தஸர்

فَجَعَلْنَـٰهَا نَكَـٰلًا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ ﴿٦٦﴾

இவர்களைப் போன்று செயற்பட்டு அது போன்ற தண்டனையைப் பெறாமலிருப்பதற்காக இந்த ஊரை அருகிலுள்ள ஊர்வாசிகளுக்கும் பின்னால் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாக ஆக்கினோம். அல்லாஹ்வின் தண்டனையையும் தனது வரம்புகளை மீறுவோரைப் பழி தீர்ப்பதையும் அஞ்சக்கூடியவர்களுக்கு நினைவூட்டலாகவும் நாம் இதனை ஆக்கினோம்.