அல்-முக்தஸர்
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا۟ بَقَرَةً ۖ قَالُوٓا۟ أَتَتَّخِذُنَا هُزُوًا ۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ ﴿٦٧﴾
மூசாவுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நடைபெற்ற உரையாடலை நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் ஒரு பசுவை அறுக்குமாறு உங்களுக்குக் கட்டளையிடுகிறான் என்று மூசா அவர்களிடம் கூறியபோது, அல்லாஹ்வின் கட்டளையை விரைந்து செயல்படுத்தாமல், எங்களை நீர் கேலி செய்கிறீரா என்று வீம்பாகக் கேட்டார்கள். அதற்கு மூசா, அல்லாஹ்வின் மீது பொய் கூறி மக்களைப் பரிகாசம் செய்பவனாக நான் ஆவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்றார்.