×

البقرة

வசனம் 65

அல்-முக்தஸர்

وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَـٰسِـِٔينَ ﴿٦٥﴾

உங்களின் முன்னோர்களைப்பற்றி நீங்கள் நன்கறிந்துள்ளீர்கள். அவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தும் வரம்புமீறினார்கள். தந்திரமாக சனிக்கிழமைக்கு முன்னரே வலையை விரித்து ஞாயிற்றுக்கிழமை வலையில் அகப்பட்ட மீன்களை எடுத்தார்கள். அல்லாஹ் அவர்களின் இந்தத் தந்திரத்திற்குத் தண்டனையாக அவர்களை இழிவுற்ற குரங்குகளாக உருமாற்றினான்.