அல்-முக்தஸர்
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ رِجْزًا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ ﴿٥٩﴾
அவர்களில் அக்கிரமக்காரர்கள் செய்ய வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் மாற்றிவிட்டார்கள். தங்களின் பிட்டத்தால் தவழ்ந்தவாறு, முடியில் ஒரு தானியம் என்று பரிகாசமாக திரித்துக்கூறியவாறு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் மார்க்கத்தின் வரம்பை மீறி கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டதால் அநியாயக்காரர்களான அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை அவன் இறக்கினான்.