×

البقرة

வசனம் 60

அல்-முக்தஸர்

وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِۦ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ ۖ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ مِن رِّزْقِ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ ﴿٦٠﴾

நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். கடுமையான தாகத்தால் பாதிக்கப்பட்டீர்கள். மூசா தன் இறைவனிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தார். நாம் அவரது கைத்தடியால் ஒரு பாறையில் அடிக்கும்படி கட்டளையிட்டோம். அவர் அடித்தபோது உங்களுடைய குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி எழுந்தன. உங்களிடையே பிரச்சனை மூண்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு குலத்திற்கும் அவர்களுக்குரிய அருந்தும் பகுதியைத் தெளிவுபடுத்தினோம். உங்களிடம் கூறினோம், உங்களுடைய எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைத்த அல்லாஹ்வின் உணவுகளை உண்ணுங்கள், பருகுங்கள். பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரியாதீர்கள்.