×

البقرة

வசனம் 58

அல்-முக்தஸர்

وَإِذْ قُلْنَا ٱدْخُلُوا۟ هَـٰذِهِ ٱلْقَرْيَةَ فَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا وَقُولُوا۟ حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَـٰيَـٰكُمْ ۚ وَسَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ ﴿٥٨﴾

பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப்பாருங்கள்: நாம் உங்களிடம் கூறினோம், பைத்துல் முகத்திஸில் நுழைந்துவிடுங்கள். அங்கு நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து தூய்மையான உணவுகளை தாராளமாக உண்ணுங்கள். அங்கு நுழையும்போது அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக, எங்கள் இறைவனே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக என்று கூறியவாறு நுழையுங்கள். நாம் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வோம். நன்மைகள் புரிந்தவர்களுக்கு மேலதிகமாக நன்மைகளையும் வழங்குவோம்.