×

البقرة

வசனம் 233

அல்-முக்தஸர்

وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَـٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ ۚ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَٰلِدَةٌۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُۥ بِوَلَدِهِۦ ۚ وَعَلَى ٱلْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوٓا۟ أَوْلَـٰدَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّآ ءَاتَيْتُم بِٱلْمَعْرُوفِ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿٢٣٣﴾

தாய்மார்கள் இரண்டு வருடம் முழுமையாக தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டும். இது பால்குடியை முழுமையாக நிறைவேற்ற விரும்புவர்களுக்கானது. விவாகரத்துச் செய்யப்பட்ட தாய்மார்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற தேவைகளுக்கு ஷரீஅத்திற்கு முரணில்லாத மக்களிடையே இருக்கும் வழக்கத்தின்படி தந்தையரே பொறுப்பெடுக்க வேண்டும். யார்மீதும் அல்லாஹ் அவரது சக்திக்குமீறி பொறுப்பு சாட்ட மாட்டான். தாய்தந்தையரில் யாரும் குழந்தையை மற்றவருக்குத் தீங்கிழைப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது. குழந்தையின் தந்தை இறந்து, அதற்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் குழந்தையின் சொத்துக்கு வாரிசாக அமையக்கூடியவர் தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டும். இரண்டுவருடம் நிறைவடைவதற்கு முன்னரே குழந்தையின் நலனை கருத்தில்கொண்டு ஒருவருக்கொருவர் ஆலோசித்து குழந்தைக்குப் பால்குடியை நிறுத்த தாய்தந்தையர் விரும்பினால் அவர்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. உங்கள் குழந்தைக்கு செவிலித்தாய்மார்களை வைத்து பாலூட்ட விரும்பினாலும் - அவர்களுக்கு அளிக்க வேண்டியதை குறைவின்றி, தாமதமின்றி முறையாக அளித்துவிட்டால் - உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள் !உங்களின் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் சேர்த்துவைத்த செயல்களின் அடிப்படையிலேயே அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.