×

البقرة

வசனம் 232

அல்-முக்தஸர்

وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ ﴿٢٣٢﴾

கணவர்கள் மனைவியரை மூன்றுமுறைக்கு குறைவாக விவாகரத்து அளித்து, மனைவியர் தங்களின் தவணையை நிறைவுசெய்துவிட்டால் - பொறுப்பாளர்களே! அவர்கள் மீண்டும் தம் கணவர்களோடு புதிதாக மணமுடித்துக் கொள்வதை விரும்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள். உங்களில் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு அவர்களைத் தடுப்பது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இதுதான் உங்களிடையே நன்மைகளை அதிகமாக வளர்த்தெடுக்கும். உங்களின் மானத்தையும் செயல்களையும் அழுக்குகளிலிருந்து பாதுகாத்து தூய்மைப்படுத்தும். விஷயங்களின் உண்மை நிலையையும் பின்விளைவுகளையும் அல்லாஹ் நன்கறிவான். அவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்.