×

البقرة

வசனம் 234

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿٢٣٤﴾

உங்களில் மரணமடைகின்றவர்களின் மனைவியர் கர்ப்பம் தரிக்காமல் இருந்தால் நான்கு மாதங்களும், பத்துநாட்களும் கட்டாயமாக காத்திருக்க வேண்டும். அந்த காலஇடைவெளியில் அவள் கணவனின் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது; தன்னை அலங்கரித்துக்கொள்ளவோ மணமுடித்துக்கொள்ளவோ கூடாது. அந்தத் தவணையை நிறைவுசெய்துவிட்டால், அவர்கள் மீது தடைசெய்யப்பட்டிருந்தவற்றை மார்க்கவரையறைக்குட்பட்டு செய்தால் பொறுப்பாளர்களே! உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். வெளிப்படையான, அந்தரங்கமான உங்களுடைய செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.