அல்-முக்தஸர்
وَإِذْ جَعَلْنَا ٱلْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَٱتَّخِذُوا۟ مِن مَّقَامِ إِبْرَٰهِـۧمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ أَن طَهِّرَا بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْعَـٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ ﴿١٢٥﴾
அல்லாஹ், புனிதமான கஅபாவை மக்கள் திரும்பத் திரும்ப வரும் இடமாகவும் ஆக்கியதையும் நினைவுகூருங்கள். அவர்களது உள்ளங்கள் எப்பொழுதும் அதனுடன் தொடர்புடையதாகவே உள்ளன. அவர்கள் அதை விட்டுச் சென்றாலும் அதன்பக்கம் திரும்புவார்கள். அதை அமைதிக்குரிய இடமாகவும் ஆக்கினோம். அங்கு அவர்கள் தாக்கப்படமாட்டார்கள். நாம் மக்களிடம் கூறினோம், கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம் நின்ற கல்லை தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள். கஅபாவை சிலைகள் மற்றும் அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தி அங்கு தவாப், இஃதிகாப், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடுவோருக்கு அதனை தயார்படுத்துமாறு இப்ராஹீமிடமும் அவருடைய மகன் இஸ்மாயீலிடமும் நாம் அறிவுறுத்தினோம்.