அல்-முக்தஸர்
وَإِذِ ٱبْتَلَىٰٓ إِبْرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَـٰتٍ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖ قَالَ وَمِن ذُرِّيَّتِى ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِى ٱلظَّـٰلِمِينَ ﴿١٢٤﴾
அல்லாஹ் இப்ராஹீமுக்கு பல சட்ட திட்டங்களைக் கட்டளையிட்டு சோதித்ததையும் நினைவுகூருங்கள். அவர் அவற்றை சிறந்தமுறையில் நிறைவேற்றிக்காட்டினார். அல்லாஹ் தன்னுடைய தூதர் இப்ராஹீமிடம், நான் உம்மை செயல்களிலும், நற்குணங்களிலும், மக்கள் பின்பற்றத்தகுந்த முன்மாதிரியாக ஆக்கப்போகின்றேன் என்று கூறியபோது, என் சந்ததிகளிலிருந்தும் மக்கள் பின்பற்றத்தகுந்த வழிகாட்டிகளை ஆக்கு என்று வேண்டினார். அதற்கு அல்லாஹ், மார்க்கத் தலைமைத்துவத்திற்கு நான் உமக்களித்த உறுதிமொழி உமது சந்ததிகளில் அநியாயக்காரர்களுக்குக் கிடைக்காது என்று கூறினான்.