×

البقرة

வசனம் 123

அல்-முக்தஸர்

وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَـٰعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ ﴿١٢٣﴾

அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த நாளில் எந்த உயிரும் பிற உயிருக்கு எதுவும் பயனளிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிணைத்தொகையும் எந்த மதிப்புமிக்கவரின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹ்வைத்தவிர உதவிசெய்யக்கூடிய வேறு உதவியாளனும் அங்கு இருக்கமாட்டார்கள்.