அல்-முக்தஸர்
وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۖ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ ﴿١٢٦﴾
தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது கூறியதை நினைவுகூருவீராக: என் இறைவனே, மக்காவை அமைதியான நகரமாக ஆக்குவாயாக. அங்கு யாருக்கும் தீங்கிழைக்கப்படக்கூடாது. அங்கு வசிப்பவர்களுக்கு பலவகையான பழங்களிலிருந்து உணவு வழங்குவாயாக. உன்மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மாத்திரம் உணவுகளை அளிப்பாயாக. அதற்கு அல்லாஹ் கூறினான்,அவர்களில் நிராகரிப்பவர்களுக்கும் உலகில் சிறிது அனுபவிக்கச்செய்வேன். பின்னர் மறுமைநாளில் அவர்களை நரக வேதனையின் பக்கம் தள்ளுவேன். மறுமைநாளில் அவர்கள் திரும்பக்கூடிய இடம் மிகவும் கெட்டதாகும்.